திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (08:49 IST)

16 வயது சிறுமிகளை சீரழித்த தயாரிப்பாளரின் பெயரை வெளியிட்ட ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் லீக் லிஸ்ட்டில் பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றனர். 
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு எழுத்தாளர் கோனாவெங்கட் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக தகவல் வெளியிட்டு, ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இதுபோன்று தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வரிசையாக புகைப்படத்துடன் வெளியிடுவேன் என்று அவர் கூறியதால் தெலுங்கு திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.
 
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் வக்கட அப்பா ராவ் 16 வயது சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த வக்கட அப்பா ராவ், ஸ்ரீ ரெட்டி கூறியது அப்பட்டமான பொய் என்றும் அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.