புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:08 IST)

’பதான்’ சிறந்த தேசபக்தி படம்; பாத்துட்டு சொல்லுங்க! – ஷாரூக்கான் விளக்கம்!

pathan -shah rukh khan
ஷாருக்கான் நடித்து வெளியாகவுள்ள பதான் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கான் அதுகுறித்து பேசியுள்ளார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘பதான்’. இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக காவி நிற ஆடை அணிந்து ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் மத்திய பிரதேசத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என ம.பி சபாநாயகர், அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகிய பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அமைப்புகள் சிலவும் படத்தில் ஆபாசமான காட்சிகள் உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளன. பதான் படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம் என அயோத்தி அனுமன் காரி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளது.

இந்த சர்ச்சைகள் குறித்து பேசிய நடிகர் ஷாருக்கான் ”பதான் என்ன மாதிரியான படம் என கேட்கிறார்கள். பதான் ஒரு தேசபக்தி படம். சமூக வலைதளங்களில் பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், நான் நேர்மறையாகவே இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K