1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (10:00 IST)

மகன்களோடு ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ்… வைரல் புகைப்படம்!

இளையராஜாவின் ராக் வித் ராஜா கச்சேரி நேற்று சென்னையில் நடந்தது. அதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இப்போது முன்புபோல பிஸியான இசையமைப்பாளராக  இருக்கும் இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் ராக்வித் ராஜா என்ற பெயரில் லைவ் கான்செர்ட் நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் அதிகமாக கவனம் ஈர்த்தது நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் வந்து கலந்துகொண்டது. தனுஷ் தன் மகன்களோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.