மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ள துணிந்த பிக்பாஸ் பிரபலம்!

papiksha| Last Updated: ஞாயிறு, 22 மார்ச் 2020 (15:43 IST)

சினிமா பின்னணி இல்லாமல் 13 வயதில் நடிக்க வந்த
ரஷமி தேசாய் இந்தி, போஜ்புரி, குஜராத்தி, அசாமி
உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்ததுடன் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னர் இந்தி பிக்பாஸ் சீசன் 13ல் கலந்துகொண்ட இவர்
டிராமா போடாமல் உண்மையாக இருந்ததால் பலகோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இந்நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், இதுவரை யாருக்கும் தெரியாத தனது இன்னொரு முகத்தை பற்றியும் தெரிவித்துள்ள ரஷமி,
சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார். அந்த நேரத்தில் யார் முகத்தையும் பார்க்க கூட பிடிக்காததால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

பின்னர்,
தான் செய்த வேலை தான் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவியதாக கூறியுள்ளார். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பல பிரச்னைகளின் காரணமாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது காதலித்து வந்த அர்ஹானை பிரிந்ததால் இந்த மன ஏற்பட்டதாக என கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ரஷமி.


இதில் மேலும் படிக்கவும் :