புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:16 IST)

அனிருத்துடன் கிண்டல் செய்தவர்ளுக்கு பதிலடி கொடுத்த பாவனா...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அப்போது இதுவரை இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து பெண் ரூபத்தில் ஒரு அனிருத், அனிருத்துக்கு பவுடர் போட்டு சேலை காட்டினாள் ஒரு நிமிடத்தில் பாவனாவாக மாறிவிடுவார் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது கிண்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள பாவனா,  எங்கள் இருவருக்கும்  ஒரே மாதிரி முக சாயல் இருக்கிறது எனவே கிண்டல் செய்பவர்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அது என்னை குத்தி காமிக்கும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. அனிருத் லுக் எனக்கு வந்ததை போலவே அவரது திறமையும் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.