ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:04 IST)

பட்டை சேலையில் பளபளன்னு கிளாமர் காட்டி ஆட்டோவில் வந்திறங்கிய பிரியங்கா சோப்ரா!

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். 
 
இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்த அவர் அண்மையில், 
இந்தி திரைத் துறையில் தான் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என கூறி அதிர்ச்சி கொடுத்தார். 
காரணம் அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில்தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது அதனால் அங்கேயே செட்டில் ஆகப்போகிறேன் என கூறி வெளியேறினார். 
இந்நிலையில் தற்போது நீடா அம்பானியின் கலாசார மையம் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த பிரியங்கா சோப்ரா 65 ஆண்டுகால பழமையான சேலையை மாடர்ன் உடையாக மாற்றி வித்யாசமாக கிளாமர் காட்டி ஆட்டோவில் வந்திறங்கி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தார்.