1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 15 மே 2021 (11:13 IST)

தளபதி 65 ஹீரோயினுக்கு இப்படி ஒரு ரோலா... குஷியில் பூஜா ஹெக்டே!

விஜய் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. 
 
தளபதி 65 படம் மட்டுமல்லாது பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் மற்றும் அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் படுபிஸியா நடித்து வருகிறார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத வித்தியாசமான கேரக்டரான ஸ்டாண்ட் அப் காமெடி ரோலில் பூஜா ஹெக்டே நடித்துள்ளாராம்.