விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா.. டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் மேக்கிங் காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் 'சிக்மா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வரும் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நட்சத்திர நடிகரின் மகனாக இருந்தாலும், நடிப்பை தவிர்த்துவிட்டு திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் காட்டும் ஆர்வம் திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையைப் போலவே மகனும் திரையுலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
Edited by Mahendran
