புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:46 IST)

படுக்க மறுத்ததால் பட வாய்ப்பு கிடைக்கல..! – மனம் திறந்த மல்லிகா ஷெராவத்!

பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் தான் சமரசம் செய்து கொள்ளததால் படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் மல்லிகா ஷெராவத். 2002ம் ஆண்டில் திரைத்துறையில் நுழைந்த இவர் “மர்டர்” என்னும் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் பெரும்பாலும் கவர்ச்சியான ரோல்களிலேயே நடித்து வந்தார்.

தமிழில் தசாவதாரம், ஒஸ்தி போன்ற சில படங்களில் சிறிய ரோல்களில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார். தற்போது இவர் ஆர்கே/ஆர்கே என்ற படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தின் ப்ரோமஷன் விழாவில் பேசிய அவர் “ஹீரோக்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நடிகைகளைதான் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கு வாய்ப்பு. அவர் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்ய வேண்டும். நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும்.

இதுபோன்ற சமரசங்களுக்கு நான் மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்தேன். எனினும் எனது திரைப்பயணம் சிறப்பான ஒன்றாகவே அமைந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.