1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (14:18 IST)

ஷாருக் கான் & தீபிகா படுகோன் நடிக்கும் பதான்… மிரட்டலான மோஷன் போஸ்டர்!

ஷாருக் கான் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் திரைப்படம்.

ஷாருக்கானின் கடந்த சில படங்கள் மோசமான தோல்வியைப் பெற்றன. இதனையடுத்து அவர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 3 படங்களில் நடித்து வருகிறார். அதில் அட்லி இயக்கும் ஜவான்  திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இந்த படத்துக்கு முன்பாகவே ஷாருக் கான் நடிக்கும் பதான் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் தீபிகா படுகோன் கதாபாத்திர மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.