புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (18:13 IST)

சூப்பர் 30 – ஹ்ரித்திக் ரோஷனின் புதிய ட்ரெய்லர்

ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்குனர் விக்கி பாஹ்ல் இயக்கியிருக்கும் திரைப்படம் சூப்பர் 30. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. வெளியான 4 மணி நேரத்திற்குள்ளாகவே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி ஹிட் அடித்திருக்கிறது ட்ரெய்லர்.

ஆனந்த குமார் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பயோஃபிக்‌ஷன் படம்தான் சூப்பர் 30. பீஹாரில் பிறந்த கணித வல்லுனரான ஆன்ந்த் குமார் ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் ஏழை,எளியவரும் படித்து உயர வேண்டும் என எண்ணினார். அதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் சூப்பர் 30. ஐஐடி நுழைவு தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெற முடியாத 30 ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தி, பயிற்சி கொடுத்து அவர்களை தயார்ப்படுத்தி சாதித்து காட்டினார். இவரைப்பற்றி டிஸ்கவரியில் ஆவணப்படம் கூட எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.