வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (12:36 IST)

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாளில் நிறைவேற்றுவோம்.. சேகர் பாபு நம்பிக்கை!

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, பல துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் இன்னும் 100 நாட்களில் அதை நிறைவேற்றுவோம் என அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார். இதற்காக பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.