செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (21:48 IST)

திருப்பதியில் முதல் திருமண நாளை கொண்டாடிய பிரபல நட்சத்திர ஜோடி

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் கபூரை கடந்த ஆண்டு இதே நாளில் திருமணம் செய்த நிலையில் இந்த ஜோடி இன்று தங்களின் முதல் திருமண நாளை திருப்பதியில் சிறப்பாக கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாது
 
தீபிகா-ரன்வீர் ஜோடி தங்களது முதல் திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாட குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்தின்போது  தீபிகா ஆச்சரியமாக குறைந்த அளவிலான மேக்கப்பில் இருந்தார். இருப்பினும் அவர் தங்க ஆபரணங்கள் அதிகம் அணிந்திருந்தார். அதேபோல் ரன்வீர் சிங் குறைந்த அளவிலான தங்க ஆபரணங்கள் அணிந்து, ஒரு தங்க நிறத்திலான குர்தா அணிந்து, தனது காதல் மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்
 
தீபிகா-ரன்வீர் ஜோடி இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இத்தாலி நாட்டில் சிந்தி மற்றும் கொங்கனி என்கிற சடங்கு முறைப்படி காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும், அதன்பின்னர் பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினர் என்பதும் தெரிந்ததே