திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:09 IST)

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து: க்ளைமேக்ஸை மாற்றிய வில்லன் நடிகர்! ஏன் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தனது படத்தின் க்ளைமேக்ஸை மாற்றியுள்ளார் இந்தி வில்லன் நடிகர்.

இந்தி படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சோனு சூட். தமிழில் அருந்ததி, ஒஸ்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபி சந்த் கதாப்பாத்திரத்தில் சோனுவே நடிக்கிறார். சிந்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பி.வி.சிந்துவாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.

படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதுவரை வெள்ளி பதக்கங்கள் வரை வென்று இரண்டாம் இடத்திலேயே இருந்து வந்தார் சிந்து. இதனால் படத்திலும் அதையே கிளைமேக்ஸாக வைத்திருந்தார்கள்.

தற்போது சிந்து சாம்பியன்ஷிப் வென்றிருப்பதால் அதற்கேற்றார் போல் க்ளைமேக்ஸை மாற்ற இருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய சோனு சூட் “சிந்துவின் வெற்றி நான் எதிர்பார்த்ததுதான். இப்போது அவர் வெற்றி பெற்றதால் படத்துக்கு புதிய கிளைமேக்ஸ் கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாக இந்த கதையோடே வாழ்ந்து வருகிறேன். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதையை எடுப்பது சவாலான அதே சமயம் சுவாரஸ்யமான ஒன்று. இந்த படம் அப்படித்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.