ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு
தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த மசோதாவிற்கு கவர்னர் இன்னும் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் நேற்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த சந்தேகங்களை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
இந்த விளக்கங்களை தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளநிலையில் மசோதாவுக்கு இன்று அல்லது நாளை ஒப்புதல் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran