திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (10:04 IST)

பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடத்த தடை! – பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

RSS
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. சமீபமாக கோவையில் தனியார் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெற்ற சம்பவம் குறித்து சர்ச்சைகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவம்பர் 26 மற்றும் 27ல் நடைபெறும் இந்த முகாமில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களிலும் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெளிவுப்படுத்தியுள்ளதுடன், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கும் அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K