செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (16:56 IST)

ஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகன்?? பச்சன் குடும்பத்தில் கலக்கம்!!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
 
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரை உலகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
ஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் எனும் 27 வயது இளைஞர் ஐஸ்வர்யா ராய்தான் தனது தாய் என கூறி அவரை சந்திக்க மும்பை வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
இது குறித்து சங்கீத் குமார் கூறியதாவது, 1988 ஆம் ஆண்டு லண்டனில் ஐவிஎஃப் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு நான் பிறந்தேன். பிறந்து இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராயின் பெற்றோரிடம் வளர்ந்தேன். 
 
அதன் பின்னர் எனது தந்தை ஆதிவேலு ரெட்டி என்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வந்துவிட்டார். ஐஸ்வர்யா எனது தாய் என்பதற்கான ஆதாரங்களை என் உறவினர்கள் அழித்துவிட்டனர். இது உண்மை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
இதேபோல், கோலிவுட் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று என மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.