திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2017 (23:59 IST)

ஜாதக பிரச்சனை: திருமணத்தை நிறுத்தினாரா வில்லன் நடிகர்??

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரமான உண்மை செய்தி உள்ளே....
 
சலீம், தர்மதுரை ஆகிய படங்களின் தயாரிப்பாளரும், தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களின் வில்லன் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சீரியல் நடிகை திவ்யாவை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார்.
 
அதன்பிறகு அவர்களது திருமணம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், ஆர்.கே.சுரேஷ் திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். 
 
அவர் தரப்பில் கூறியதாவது, ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் தற்போதைக்கு திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும். மேலும் திருமணம் நின்றுவிட்டதாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.