உல்லாச கப்பலில் போதை பார்ட்டி: சிக்கியது இந்த பிரபலத்தின் மகனா??
உல்லாச கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர்.
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல பாலிவுட் நடிகர் மகனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் மகனிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எனவும் அவரது மகன் ஆர்யன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.