சல்மான் கான் தம்பியின் முன்னாள் மனைவியுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அர்ஜுன் கபூர்!

papiksha| Last Updated: வியாழன், 24 அக்டோபர் 2019 (16:02 IST)
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அர்ஜுன் கபூர் மலாய்காவுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படமொன்றை பதிவிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். காதலை உறுதி படுத்தாமல் மீண்டும் மீண்டும் கிசுகிசுக்கப்பட்டு வரும் இந்த ஜோடி தற்போது பாலிவுட்டின் தலைப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

♥️

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) onஇதில் மேலும் படிக்கவும் :