செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (15:29 IST)

தம்பி வயது நடிகருடனான காதலை வெளிப்படுத்திய பாலிவுட் நடிகை!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
 

 
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெழித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டகிராமில் மலாய்கா அர்ஜூன் கபூருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய வேடிக்கையான, அற்புதமான அர்ஜூன் கபூருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். காதலும் மகிழ்ச்சியும் எப்போதும் என்று கூறி அர்ஜூன் கபூருக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்தியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உருத்தாகியுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்ககள் கூறுகிறது. 

இதற்கு முன்னர் நடிகர் அர்ஜுன் கபூர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானை காதலித்து குறிப்பிடத்தக்கது 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy bday my crazy,insanely funny n amazing @arjunkapoor ... love n happiness always

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on