1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:03 IST)

ஏமாற்றமே மிச்சம்: பல கோடி நஷ்டத்தை ஈட்டு தந்த லால்சிங் சத்தா!!

180 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தியேட்டர் வசூலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.


இந்தி நடிகர் அமீர்கான் நடித்து வெளியாகிய படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த லால் சிங் சத்தா. இந்த படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டர்.

இந்த படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என பல இடங்களில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த அளவு ஆமீர் கான் அந்த கதாப்பாத்திரத்தை புரிந்து நடிக்கவில்லை. பல இடங்களில் பிகே படத்தில் வரும் ஏலியன் ஆமிர்கான் போல முகபாவனைகள் காட்டுகிறார் என சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த படத்திற்கு IMDB தளத்தில் 3.9/10 ரேட்டிங்கே கிடைத்தது. இந்நிலையில் இப்படம் இதுவரை ஈட்டிய வசூல் தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 180 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தியேட்டர் வசூலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. 4 நாள் மொத்த வசூலாக 38 கோடியே 75 லட்ச ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது.

ரூ.180 கோடியில் தயாரான திரைப்படம் இதுவரை ரூ. 38 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் வெளியான அமீர்கானின் திரைப்படங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்ற படமாக 'லால்சிங் சத்தா' மாறியுள்ளது.