1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (14:51 IST)

வொர்ஸ்ட் ரேட்டிங்.. நிரம்பாத தியேட்டர்கள்! – ஃப்ளாப் ஆனதா லால் சிங் சத்தா?

laal singh chadda
இன்று ஆமிர் கான் நடித்த லால் சிங் சத்தா படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தி நடிகர் அமீர்கான் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இந்த படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

இன்று இந்த படம் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என பல இடங்களில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த அளவு ஆமீர் கான் அந்த கதாப்பாத்திரத்தை புரிந்து நடிக்கவில்லை. பல இடங்களில் பிகே படத்தில் வரும் ஏலியன் ஆமிர்கான் போல முகபாவனைகள் காட்டுகிறார் என சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு IMDB தளத்தில் 3.9/10 ரேட்டிங்கே கிடைத்துள்ளது. மேலும் பல இடங்களில் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை என்றும், சமீபமாக ஆமீர்கானுக்கு எதிராக #BoycottLalSinghChaddha என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவதும் பட சரியாக போகாததற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.