1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (22:05 IST)

குடிபோதையில் நடிகையை துரத்தி துரத்தி தாக்கிய பிரபல நடிகர் கைது

பிரபல பெங்காலி நடிகர் ஜாய்குமார் முகர்ஜி நடிகை சயந்திகாவை குடிபோதையில் தாக்கியதற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பெங்காலி திரையுலகில் கடந்த 2010 ல் வெளியான தி ஃபைனல் மிஷன் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜாய்குமார் முகர்ஜியும், அதே படத்தில் கதாநாயகியாக நடித்த சயந்திகாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
 
அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த உமா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதனால் ஜாய்குமார்  சயந்திகாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினார்.
அதற்காக அவரிடம் சமரசம் பேசியுள்ளார். ஆனால் அவர் அதற்கு பிடி கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜாய்குமார் குடிபோதையில் சயந்திகாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கடும் கோபமடைந்த அவர், சயந்திகாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
இதனையடுத்து சயந்திகாவின் மேனேஜர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜாய்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாய்குமார் கோர்ட்டில் 500 ரூபாய் செலுத்தி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.