வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (21:04 IST)

சர்ச்சையில் ‘சர்கார்’ ; சுகாதாரத்துறை நோட்டீஸ் : படக்குழு அதிர்ச்சி

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகளை சர்கார் பட போஸ்டரிலிருந்து நீக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போல் காட்சி அமைந்துள்ளது.
 
இதைக்கண்ட பலரும் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய்க்கு பொது சுகாதாரத்துறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
அதில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி அடங்கியுள்ள போஸ்டர்களை இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் இல்லையேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.