திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (18:36 IST)

ஆபாசமாக படமெடுத்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த நடிகை

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பேராசிரியர் ஒருவரின் கன்னத்தில் அந்த நடிகை அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே விமானத்தில் விஜய் பிரகாஷ் என்ற கல்லூரி பேராசிரியரும் பயணம் செய்தார். விஜய் பிரகாஷ் தொலைக்காட்சி நடிகையை பலவித கோணங்களில் தனது செல்போனில் படமெடுத்ததாகவும் அதில் ஒருசில புகைப்படங்கள் ஆபாச கோணங்களிலும் இருந்ததாகவும்  தெரிகிறது
 
இதனை கவனித்த நடிகை, அந்த புகைப்படங்களை நீக்குமாறு கூறினார். ஆனால் விஜய்பிரகாஷ் அதற்கு மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. ஒருகட்டத்தில் நடிகை, பேராசிரியரின் கன்னத்தில் பளார் பளார் என மாறி மாறி அறைந்ததால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து நடிகையுடன் வந்திருந்தவர்கள், விஜய்பிரகாஷை போலீஸ்  வசம் ஒப்படைத்தனர். போலீசார் அவருடைய செல்போனை ஆய்வுசெய்த போது நடிகையின் ஆபாச கோணங்கள் புகைப்படங்கள் இருந்தது. பின்னர் அந்த படங்களை டெலிட் செய்த போலீசார் விஜய்பிரகாஷை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பேராசிரியர் ஒருவரை தொலைக்காட்சி நடிகை கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.