1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (10:24 IST)

கொரிய அதிபர் - சீன அதிபர் சந்திப்பு: அமெரிக்க அதிபருக்கு ஆப்பா?

சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். வட கொரியாவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
 
2005 ஆம் ஆண்டிலிருந்து சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை. சீனாவில் இதுவரை இவர்கள் இருவரும் நான்கு முறை சந்தித்துள்ளனர். 
 
ஏன் இந்த சந்திப்பு?
சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வது கடந்த 14 வருடங்களில் இதுதான் முதல் முறை. மேலும் 2012ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ஜின்பிங் வட கொரியாவுக்கு பயணம் செய்வதும் இது முதல்முறை.
கடந்த வருடம் நடைபெற்ற அடுத்தடுத்த ராஜரீக நடவடிக்கைகளால் சற்று தடுமாறியிருந்த கிம்மிற்கு உத்வேகமளிக்கக்கூடிய ஒரு சந்திப்பாக இது அமையும். இருநாட்டு தலைவர்களும் அணு ஆயுத பயன்பாடு தொடர்பாக தடைபெற்ற பேச்சுவார்த்தை, ஹனாய் சந்திப்பு தோல்வியில் முடிந்தது ஆகியவை குறித்து ஆலோசிப்பார்கள்.
 
ஷி ஜின்பிங் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார் என்றும், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க ஏதேனும் வழிவுள்ளதா என்றும் ஜப்பானில் டிரம்பை சந்திக்கும்போது பேசுவதற்கான தகவல்கள் ஆகியவை குறித்தும் ஷி ஜின்பிங் தெரிந்து கொள்ள நினைப்பார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.