இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு இல்லையென தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. 2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில்...