1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (20:04 IST)

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - இந்திய அரசு முடிவு

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவிக்கவுள்ளது.


 
வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதுதான் "வீர் சக்ரா".
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.
 
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
 
அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.
 
மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.
 
சென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர்.
 
பாலகோட் தாக்குதலின்போது போர் கட்டுப்பதாட்டு அதிகாரியாக தரையில் இருந்து பணிபுரிந்த இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடரான மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது.