திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (14:25 IST)

விதிகளைத் தளர்த்திய இந்தியா பாகிஸ்தான் – தொடங்கியது விமான சேவை !

பாலகோட் தாக்குதலின் போது நிறுத்தப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான விமானப்போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தத்தாக்குதலின் போது இருநாடுகளும் மற்ற நாட்டுடன் விமானப்போக்குவரத்துக்கு தடை விதித்தன. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விமானங்கள் மாற்று வழிகளில் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில் 140 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானப்போக்குவரத்தை இரு நாடுகளும் மீண்டும் தொடங்கியுள்ளன.