1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (15:09 IST)

இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன?

சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம்.

 
1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர், அந்நாட்டின் மத கடும்போக்காளர்கள் அதிகாரத்திற்கு வந்ததது முதலே இஸ்ரேலை ஒதுக்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
 
இஸ்ரேல் முஸ்லீம்களின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இரான் குற்றஞ்சாட்டி வருகிறது.
 
எனவே, தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக இரானை கருதும் இஸ்ரேல், அது அணுஆயுதங்களை பெற்றுவிடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இரானின் ஆதிக்கத்தால் இஸ்ரேலிய தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
கடந்த 2011ல் இருந்து போரில் பாதிக்கப்பட்டு வரும் தனது அண்டை நாடான சிரியாவின் நிலையை இஸ்ரேல் கவலையுடன் கண்டு வருகிறது. சிரியா அரசாங்கத்துக்கும், போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றபோது அதிலிருந்து விலகிய நிலையை கடைபிடித்தது இஸ்ரேல்.
 
ஆனால், போராளிகளுக்கெதிரான போரில் சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இரான் பெரும் பங்கை வகித்தது. தனது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்களை சிரியா அரசாங்க படைக்கு உதவியாக இரான் அனுப்பியது.
 
தனக்கு அச்சுறுத்தல் அளிக்கும் மற்றொரு அண்டை நாடான லெபானின் வீரர்களுக்கு இரான் ரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதற்கு முயற்சிப்பதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.
 
தங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்புள்ளதால், சிரியாவில் ராணுவ நிலைகளை அமைப்பதற்கு இரானை அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.
 
இந்நிலையில், சிரியாவில் வலுவான நிலையை இரான் அடைந்துள்ளதால், அதன் ராணுவ நிலைகளின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
 
இல்லை. இஸ்ரேலை இலக்காக கொண்டிருக்கும் அமைப்புகளான ஹெஸ்புல்லா மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவை இரான் நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது. ஆனால், இருநாடுகளிடையே நேரடி போர் ஏற்படும் பட்சத்தில் அது இருதரப்பினருக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
 
நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் கொண்ட ஆயுத கிடங்கையும், அதிக ஆயுதங்களை ஏந்திய கூட்டுப் படைகளையும் இஸ்ரேலிய எல்லைப்பகுதிகளில் இரான் நிறுத்திவைத்துள்ளது.
 
இஸ்ரேல் மிக வலுவான ராணுவத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.