1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (12:03 IST)

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்?

2015-ல் இரான் உடன் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என்ற முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் சமரசத்தை எதிர்பார்க்கின்றன.

 
இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியளவை டிரம்ப் முறித்துக்கொளலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், டிரம்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரிருந்தார்.
 
இத்தாலி: ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல்
 
இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஐந்து நட்சத்திர இயக்கம், வலதுசாரி கட்சியான பேர்ஸா இத்தாலியா உடனே அல்லது மைய இடதுசாரி கட்சியான ஜனநாயக கட்சியுடனே கூட்டணி சேர மறுத்துவிட்டது.

 
இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இத்தாலி மீண்டும் போது தேர்தலைச் சந்திக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு முடிவு வரை ஒரு நடுநிலை காபந்து அரசை உருவாக்க வேண்டும் என்ற இரண்டு முடிவு மட்டுமே உள்ளது.
 
நடுநிலை காபந்து அரசுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என இத்தாலி அதிபர் மட்டெரேல்லா கோரியுள்ளார்.
 
லெபனானில் தனது வெற்றியை அறிவித்த ஹெஸ்பொல்லா

 
2009க்கு பிறகு லெபனானில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், ஹெஸ்பொல்லா கட்சியும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தனது ''ப்யூச்சர் மூவ்மெண்ட்'' கட்சி மூன்றில் ஒரு தொகுதியில் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சாட் ஹரிரி கூறியுள்ளார்.
 
ஆப்கான் வான் தாக்குதல்: ஐ.நா அறிக்கை

 
ஆப்ஃகானிஸ்தானின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் மாகாணத்தில், கடந்த மாதம் நடந்த வான் தாக்குதலில் 30 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நாவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. தாலிபான் அமைப்பை சேர்ந்த முக்கியமானவர்களை குறி வைத்து ஏப்ரல் 2-ம் தேதி தனது வான் படை இத்தாக்குதலை நடத்தியதாக ஆப்கான் அரசு கூறியது.