1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. US State Department Ignore Beijing Winter Olympics

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை

சீனா
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு தங்கள் நாட்டின் சார்பாக அதிகாரிகள் அனுப்பப்பட மாட்டார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
ஆனால், தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள் எனவும், அவர்களுக்கு அரசின் முழு ஆதரவு இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தால், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, சீனா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
 
சீனாவின் ஷின் ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக, ஏற்கெனவே அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
மீண்டும் குறைந்தது தங்கம், வெள்ளி விலை!