வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (09:34 IST)

அமெரிக்கா தலைமையில் ஜனநாயக மாநாடு! – சீனா, ரஷ்யா புறக்கணிப்பு!

அமெரிக்கா தலைமையில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – சீனா இடையே பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியான மோதல் தொடர்ந்து வருகிறது. அதேபோல ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உறவுநிலை சிக்கலும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா தலைமையில் ஜனநாயக உச்சி மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மேலும் தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த அழைப்பு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.