வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (16:39 IST)

ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன?

ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே பல மாதங்களாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது.


விளாடிமிர் புதின் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்? எனக்கு ரஷ்யாவின் எதிர்காலம் பற்றியோ, அல்லது எனக்கு புதினுடன் நேரடி தொடர்போ இல்லை என்பதை முன்கூட்டியே பொறுப்பு துறப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒருமுறை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், நான் விளாடிமிர் புதினின் கண்களை பார்த்தேன். "அவரது ஆன்மாவின் உணர்வை அறிந்தேன்" என்று சொல்லி இருக்கிறார். இதனால் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகள் எப்படி முடிவுக்கு வந்தன என்பதை பார்க்கலாம்.

ஆகவே, ரஷ்ய தலைவரின் உள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிவது மிகவும் நன்றியற்ற பணியாகும். மாஸ்கோவின் அணு சக்தி அச்சுறுத்தல் எனும் அண்மைகால தெளிவில், முன் எப்போதையும் விட இப்போது ஒருவேளை அதற்காக முயற்சி செய்வது முக்கியமானதாகும்.

ரஷ்ய அதிபர் மிகுந்த அழுத்ததில் இருக்கிறார் என்று ஒரு சிறிய சந்தேகம் நிலவுகிறது. யுக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அவர் அழைக்கும் இந்த திட்டம் அவருக்கு மிகவும் மோசமானதாக போய்விட்டது.

இது ஒருவேளை சில நாட்களில் முடிந்திருக்கும். ஆனால், நாம் எட்டு மாதங்களை கடந்திருக்கின்றோம். முடிவு ஏற்படுவதற்கான சூழல் கண்ணில் படவில்லை. குறிப்பிடத்தக்க அளவுக்கு படைகள் இழப்பை சந்தித்திருப்பதாக ரஷ்யா ஒப்புக்கொண்டிருக்கிறது. அண்மை வாரங்களாக ரஷ்ய ராணுவம் முன்பு ஆக்கிரமித்த அதன் சில பிராந்தியங்களை யுக்ரேனிடம் இழந்திருக்கிறது.

படை வீரர்களை ஊக்கப்படுத்த, தற்போது இருப்பில் உள்ள குடிமக்கள் அணிதிரட்டப்படுவார்கள் என்று கடந்த மாதம் புதின் அறிவித்தார். அவர் வலியுறுத்திய ஒன்றை அவர் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே, சர்வதேச நாடுகளின் தடைகள் காரணமாக ரஷ்ய பொருளாதாரம் சீர் குலைக்கிறது. புதினின் மனநிலை என்னவாக இருக்கிறது என்ற விஷயத்துக்கு வரலாம். அவர் நினைப்பது எல்லாம் தவறாகப் போகிறதா, ஊடுருவது என்ற அவரது முடிவு அடிப்படையில் கோளாறானதா?

அதனை அப்படி கருதமுடியாது
"புதினின் அறிவுத்திறன். ஒட்டு மொத்த சூழலையும் இந்த சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறது," என்று நம்புகிறார் நேசவிசிமய கெஸெட்டா எனும் ரஷ்ய செய்தி தாளின் உரிமையாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கான்ஸ்டான்டின் ரெம்சுகோவ்.

அணு சக்திக்கு அவர்தான் அதிகாரம்படைத்த தலைவர். அவர் இந்த நாட்டின் சவாலுக்கு அப்பாற்பட்ட தலைவர். அவர் சில வலுவான நம்பிக்கைகள், கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அவை அவரை வெறி கொண்டவராக(பித்துப் பிடித்தவராக) மாற்றியிருக்கிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த கண்ணோட்டத்தின் இருத்தியலிலிருந்து வந்தது என்று அவர் நம்பத் தொடங்கினார். இது அவருக்கு மட்டுமல்ல. ஆனால், ரஷ்யாவுக்கான எதிர்காலத்துக்காகவும் அவ்வாறு நம்பத் தொடங்கினார்.

இந்த முரண்பாட்டு இருத்தியலில், வெற்றி பெற அதிபர் புதின் எவ்வளவு தூரத்துக்கு தயாராக இருக்கிறார். அண்மைய மாதங்களில் மூத்த ரஷ்ய அதிகாரிகள்(புதின் உட்பட) வெளியிட்ட தெளிவற்ற குறிப்புகளில் இந்த போரில் ரஷ்ய தலைவர் அணு ஆயுதங்களை உபயோகிக்க தயாராகி வருகிறார் என்று கூறி வந்தனர்.

"அவ்வாறு செய்வார் என்று நான் கருதவில்லை," என அமெரிக்க அதிபர் ஜோபிடன் சிஎன்என் செய்தியிடம் தெரிவித்தார். "இது பற்றி அவர் பேசுவது பொறுப்பற்றது என்று நான் கருதுகின்றேன்," என்றும் கூறியிருந்தார்.

இந்த வாரம் ரஷ்யா, யுக்ரேன் மீது தொடர்ச்சியாக குண்டுகள் வீசியதைத் தொடர்ந்து, மிகவும் குறைந்தபட்சமாக ரஷ்யா அது போன்று செயல்பட வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தீர்மானம் யுக்ரேனில் மட்டுமின்றி மேற்கு நாடுகளிலும் கூட பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

"அவர் மேற்கு நாடுகளுடனான நேரடி மோதலை தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனால், அதே சமயம் அதற்கு அவர் தயாராகி வருகிறார்," என்கிறார் மூத்த அரசியல்வாதி கிரிகோரி யாவ்லின்ஸ்கி."அணு ஆயுத போர் வருவதற்கான சாத்தியம் அதிகமிருப்பதாக நான் அச்சப்படுகின்றேன். இரண்டாம்பட்சமாக முடிவற்ற போர் வரலாம் என்றும் கருதுகின்றேன்," என்றார்.

ஆனால், முடிவற்ற போருக்கு முடிவற்ற வகையில் வளங்கள் தேவை. அது போன்ற எதையும் ரஷ்யா கொண்டிருப்பதாக தெரியவில்லை. அலை அலையாக யுக்ரேன் நகரங்களின் மீது ஏகவுகனை வீசுவது படைகளின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், எவ்வளவு காலத்துக்கு ரஷ்யா இதில் நீடித்திருக்க முடியும்?

"இந்த ஏவுகணை வீச்சுகளை நாட்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக உங்களால் தொடர முடியுமா? நம்மிடம் போதுமான ஏகவுகணைகள் இருக்கிறதா என்று பல நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்," என்கிறார் ரெம்சுகோவ்.

"தவிர ராணுவத்தின் கண்ணோட்டத்தில் இருந்து முழுமையான வெற்றிக்கு எது அறிகுறி என்று யார் ஒருவரும் சொல்லவில்லை. வெற்றியின் அடையாள சின்னம் என்ன? 1945ம் ஆண்டில் பெர்லின் மீது வெற்றி என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இப்போதைக்கு வெற்றியின் அளவு கோல் என்ன? யுக்ரேன் நகரங்களான கிவ்(பேனர்), கெர்சன், கார்கிவ் ஆகியவற்றின் மீது வைப்பதா? எனக்கு மட்டுமல்ல. வேறு யாருக்குமே தெரியவில்லை," என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம், யுக்ரேனை வேகமாக தோற்கடிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் நோக்கம் வெளிப்பட்டது. இதனால்தான் ரஷ்யாவின் அண்டைநாடுகள் இது குறுகியகால போர் என மாஸ்கோவின் வளைத்துக்குள் வந்தனர். அவர் தவறாக கணக்கிட்டு விட்டார். யுக்ரேன் ராணுவத்தை மட்டும் அவர் தவறாக மதிப்பிடவில்லை. தங்கள் நிலத்தை தற்காத்து நிற்கும் மக்கள், தனது சொந்த ராணுவத்தின் திறனையும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.

இப்போது அவர் என்ன நினைக்கிறார்? தற்போது உரிமை கோரி இணைத்திருக்கும் யுக்ரேனின் பிராந்தியங்களை ஆளுகைக்கு உட்படுத்துவதும், அதன் பின்னர் போரை நிறுத்தி வைக்கவும் தற்போது புதின் திட்டமிட்டிருக்கிறாரா? அல்லது ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலமாக ஒட்டு மொத்த யுக்ரேனை வளைக்கும் வரை போரை தொடர தீர்மானித்திருக்கிறாரா?

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், யுக்ரேன் நாட்டின் இப்போதைய கட்டமைப்பு தொடர்ந்து, நேரடியாக தெளிவாக ரஷ்யாவுக்கான அச்சுறுத்தலாகும். யுக்ரேனின் அரசியல் ஆட்சியை முழுமையாக அகற்றுவதே நமது எதிர்கால செயல்பாடுகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என நான் நம்புகின்றேன்," என்று இந்த வாரம் எழுதியுள்ளார்.

மெத்வதேவின் வார்த்தைகள் புதினின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருந்தால் நீடித்த, ரத்தம் தோய்ந்த மோதலை எதிர்பார்க்கலாம். ஆனால், தவிர்க்க முடியாதபடி வெளிநாட்டில் புதினின் செயல்பாடுகள், உள்நாட்டில் காரணத்தை விளைவிப்பதாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக ரஷ்யா, புதின் வலுவானவர் என்ற பின்பத்தை சிரத்தையுடன் விதைத்திருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு அவர் பொறுப்பு வகிக்கிறாரோ அதுவரை நிம்மதியாக இருக்கலாம் என்று ரஷ்ய மக்கள் நம்பும்படி ஊக்குவிக்கப்படுகிறது. இது இப்போது செல்லுபடியாவது கடினம்.

"புதின் மற்றும் சமூகத்துக்கு இடையே முந்தைய ஒப்பந்தம் உங்களை பாதுகாப்பேன், என்பதாக இருந்தது," என்றார் ரெம்சுகோவ். "பல ஆண்டுகளாக முன்கணிப்பு என்பது முக்கியமான சொற்றொடராக இருக்கிறது. இன்றைக்கு என்ன மாதிரியான முன் கணிப்பு இருக்கிறது? இந்த கருத்தாக்கம் முடிந்து விட்டது.

எதுவும் முன் கணிப்பதாக இருக்காது. வீட்டுக்கு சென்ற உடன் சேவை பணி உத்தரவு கடித்ததை பெறுவோமா இல்லையா என்பது என்னுடைய செய்தியாளர்களுக்கு தெரியாது.
புதின் யுக்ரேனில் ஊடுருவதாக முடிவெடுத்தது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், யாவ்லின்ஸ்கிக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

"ஆண்டுக்கு ஆண்டு அவர் இப்போது நம்மிடம் இருப்பதற்கான வழியை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த திசை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்," என்றார் யாவ்லின்ஸ்கி.

"உதாரணத்துக்கு சுதந்திரமான ஊடகங்களை அழித்தார். 2001ம் ஆண்டு இதனை அவர் தொடங்கினார். சுதந்திரமான வணிகங்களை அழித்தார். அதனை அவர் 2003ம் ஆண்டும் பின்னர் 2014ம் ஆண்டிலும் தொடங்கினார். கிரிமியா மற்றும் டான்பாஸில் என்ன நடந்தது. அதனை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பார்வையற்றவராக இருந்திருக்க வேண்டும்.

"ரஷ்யாவின் பிரச்னைதான் நமது அமைப்பு முறை. ஒரு முறை, இங்கே உருவாக்கப்பட்டது. அதனை இது போன்ற (புதின்) நபர் உருவாக்கினார்.இந்த முறையை உருவாக்குவதில் மேற்கு நாடுகளின் பங்கு குறித்த கேள்வி மிகவும் தீவிரமான ஒன்றாகும். "இந்த முறையில் இருக்கும் இந்த பிரச்னையை சமூகம் உருவாக்கவில்லை. ரஷ்யாவில் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.ஆனால், அங்கு ஒரு மக்கள் சமூகம் இல்லை. அதனால்தான் ரஷ்யாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை."