வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (12:22 IST)

சரணடைய சொல்லும் ஜெலன்ஸ்கி.. மிரட்டும் புதின்! – குழப்பத்தில் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது என அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் எக்காரணம் கொண்டும் உக்ரைனிடம் சரணடைய கூடாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அப்படி சரணடையும் வீரர்களுக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதினின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைனிடம் சரணடையும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டு பொதுமக்களை போலவே கருதி நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.