1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (20:22 IST)

துருக்கி அதிபர் எர்துவானைப் பிடிக்க முயன்ற 11 கமாண்டோக்கள் கைது

துருக்கியில் இருவாரங்களுக்குமுன், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தொடக்கத்தில் அதிபர் ரெசீப் தாயிப் எர்துவானை பிடிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ராணுவ குழு ஒன்றை துருக்கி சிறப்பு படையினர் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 

 
துருக்கி அதிபர் எர்துவான் தனது விடுமுறையைக் கழிக்க, மர்மாரிஸ் என்ற சுற்றுலா வாசத்தலத்தில் தங்கியிருந்தார்.
 
அதற்கு வெளியே சட்டவிரோதமாக வந்திருந்த 11 கமாண்டோக்கள் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, ரகசியமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அதிபர் எர்துவான் தப்பியோடினார்.
 
அதன்பின், அந்த ஹோட்டலை போராளி படையினர் சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.
 
ஒரு காட்டுப்பகுதியில் பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த கிராமவாசிகள் சிலர் தப்பியோடிய படையினரை பார்த்ததை தொடர்ந்து,ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைக் கொண்டு அவர்களைக் கண்டு பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கையின் போது இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், ஆனால் யாரும் இறக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.