வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (13:56 IST)

மூடப்படும் தாய்லாந்தின் பிரபல பீச்: தரமான காரணம்!!

2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021 ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள 'மாயா பே' கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த கடற்கரை கடந்தாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
 
மூடப்படுவதற்கு முன்புவரை இந்த கடற்கரையில் நாள் முழுவதும் 5,000 சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நிலை காணப்பட்டது. அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.
 
இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.