புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (00:17 IST)

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

சூடான் தலைநகர் கார்ட்டூமில், அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
 
கடந்த அக்டோபரில் சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்றைய போராட்டத்தை தொடர்ந்து மக்கள் கூடுவதைத் தடுக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை ராணுவ நிர்வாகம் துண்டித்துள்ளது. மக்களை கண்காணிக்க முக்கிய சாலைகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.