திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (15:13 IST)

காஷ்மீர் முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதி மன்றம்  அவசர வழக்காக விசாரிக்க மறுத்துள்ளது. 
 
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் சட்ட உறுப்புரை 370-ன் உட்பிரிவுகள் நீக்கம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. 
 
அங்கு முன்னறிவிப்பின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இணையதள சேவைகள், போக்குவரத்து ஆகியவை முடக்கப்பட்டுள்ளது ஆகியவற்றுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் சட்டவிரோதத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது. உரிய அமர்விடம் இந்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
 
எனவே இந்த வழக்கு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.