செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2016 (21:07 IST)

கோப மனோநிலையில் கடுமையான உடற்பயிற்சியா? மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

கோபமாக இருக்கும் போது அல்லது வருத்தத்தோடு இருக்கும் போது கடுமையான உடற்பயிற்சி செய்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை, அது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று ஒரு பெரிய சர்வதேச சுகாதார ஆய்வு கூறியுள்ளது.


 

 
ஐம்பத்திரண்டு நாடுகளில் இருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், மக்கள் தங்கள் மன உணர்வுகளை சாந்தப்படுத்தும் ஒரு வழியாக, தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என்று தங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
கனடா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மன உளைச்சலே மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகப்படுத்தும் நிலையில், கடுமையாக உடற்பயிற்சி செய்தால், அது அந்தச் சாத்தியத்தை மும்மடங்காக அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.
 
புகைத்தல் அல்லது உடல் பருமன் போன்ற காரணிகள் அல்லாமல், கடுமையான உடற்பயிற்சி ஏற்படுத்தும் ஆபத்துக்கான சாத்தியம் வேறானது என்றனர்.
 
இந்தக் கண்டுபிடிப்புகள், அமெரிக்கன் ஹார்ட் அச்சொசியேஷன் ஜர்னல் (American Heart Association journal) சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.