1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (11:46 IST)

பதவி விலகிய எடியூரப்பா - "நீதிமன்றத்தின் பங்கும், காங்கிரசின் சாதுர்யமும்"

கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் கடந்த சனிக்கிழமையன்று எடியூரப்பா பதவி விலகினார். எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் வியூகம் பலிக்கவில்லையா? என்று பிபிசி தமிழின் ‪வாதம் விவாதம்‬ பகுதியில் கேட்டிருந்தோம்.
 
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்
 
"எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைதான் முக்கிய காரணம் என்றாலும் நீதிபதிகளின் நேர்மையும் காங்கிரசின் சாதுர்யமும், ஆட்சியை அவர்களுக்கு மீட்டுக்கொடுத்தது. இதே ஒற்றுமையை எல்லா எதிர்க்கட்சிகளும் பின்பற்றினால் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவை தோற்கடிக்கலாம்" என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெல்லை முத்துசெல்வம், "எதிர்க்கட்சிகளின் செயற்கையான ஒற்றுமை முக்கியமான காரணம் எனலாம். இந்த கூட்டணி அடுத்த ஆறு மாதத்திற்கு மேல் நிற்குமா என்பது சந்தேகம் தான்" என்கிறார்.
 
பாஜகவின் நாடகம் இன்னும் முடியவில்லை என்கிறார் பிபிசி நேயர் செந்தில்.
 
பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடியாகப் பெரும்பான்மை இன்றியே ஆட்சியைக் கைப்பற்ற நினைக்க, இந்த இழி நிலைக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது அதிரடியான அணுகுமுறை என்று கூறியுள்ளார் ட்விட்டர் நேயர் ரெங்கசாமி.