திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (17:45 IST)

பெரும்பான்மை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம்?

104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜக 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 
அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், மஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது. காங்கிரஸ் கட்சியின் அழைப்பை மஜக கட்சியும் ஏற்றுக்கொண்டது.
 
இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ், மஜக கூட்டணியில் ஆட்சி அமையும் என்பது முடிவாகியது. இந்நிலையில் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.