1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (14:45 IST)

வட கொரியா ஏவுகணை சேதனையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது: தென் கொரியா

வட கொரியா ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாகவும் ஆனால் அது உடனடியாக தோல்வியடைந்துவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.


இந்த சந்தேகத்திற்குரிய ஏவுகணை வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிலிருந்து ஏவப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தலம்தான் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஏவுகணைகளை சோதனைகளுக்கும் பயன்படுத்தபட்டது.

அதேபோல இதற்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்த்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அதுவும் இந்த தலத்திலிருந்துதான் ஏவப்பட்டது.

சமீபத்திய நாட்களில் வட கொரியா தனது ஆயுதங்கள் சோதனையை அதிகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு செய்திதளமான என்கே நியூஸ், ஏவுகணை சோதனையை கண்டவர்கள் அதிகப்படியான சத்தத்தை கேட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சத்தம் ஒரு பெரிய விமானம் பறந்ததது போலவும், அது வெடித்தது போலவும் இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தலைநகர் பியாங்யாங்கில் வானில் சிகப்பு புகை எழுந்ததையும் அவர்கள் கண்டதாக என்கே நியூஸ் தெரிவிக்கிறது.

என்கே செய்தி தளத்திடம் பேசிய கார்னீஜீ என்டவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்ற ஆய்வுக் கழகத்தை சேர்ந்த அங்கிட் பாண்டா, இந்த படம் ஒரு மிகப்பெரிய தோல்வியை காட்டுகிறது என்றார். மேலும் "அந்த ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிற புகை திரவ எரிப்பொருளுடன் தொடர்புடையது. இது மனிதர்கள் மிகவும் ஆபத்தானது," என்றார்.

இந்த வருடம் வட கொரியா இதுவரை ஒன்பது ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் அமெரிக்காவால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை அடங்கும். முழு வீச்சிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கான முன்னோட்டம்தான் அந்த சோதனை என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

5,500 கிமீட்டர் தூரம் பாயக்கூடிய அந்த ஏவுகணை அமெரிக்கா வரைக்கும் செல்லக்கூடியது. மேலும் அது ஆணு ஆயுதங்களை கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சோதிக்க ஐநா தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிறுத்தி வைத்திருந்தது வட கொரியா.
ஆனால் 2020ஆம் ஆண்டு தான் இந்த உறுதியை கைவிடப்போவதாக கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

இருப்பினும் பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற சோதனைகள் உளவு செயற்கைக்கோள் உருவாக்கத்தின் ஒரு பங்கு என்று வட கொரியா தெரிவித்தது.