வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (13:57 IST)

தீம் பார்க்கில் மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் இடம் தவறாக நடந்துக்கொண்ட ஆண்கள்!

மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் வேடமிட்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சுற்றுலா பயணிகள் மீது புகார் எழுந்துள்ளது. 
 
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்கள். மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் போன்று டிஸ்னி பாத்திரங்களாக வேடமிடும் நபர்களிடம் சுற்றுலாப் பயணிகள் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
 
வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஒர்லேண்டோ, ஃப்ளோரிடா மாகாணங்களில் உள்ள தீம் பார்க்குகளில் இதுபோன்று நடந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
 
மிக்கி மவுஸ் போன்று வேடம் அணிந்த பெண்ணை ஒரு மூதாட்டி தன்னை தலையில் அடித்துவிட்டு சென்றதால் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மின்னி மவுஸ் மற்றும் டொனால்ட்டு டக் வேடம் அணிந்த இரு பெண்கள், தங்களை சிலர் தவறான முறையில் தொடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.