ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (21:35 IST)

வைக்கோற்போரில் ஊசியைத் தேடும் கலைஞர்

வைக்கோற்போரில் தொலைத்த ஊசியைத் தேடுவது போல வேலையற்ற வேலை ஒன்றுமில்லை என்பார்கள்.


இந்த "வேலையற்ற வேலை"யை ஒரு இத்தாலியக் கலைஞர் அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்யவிருக்கிறார்.
 
உண்மைதான், இது போன்ற பல கலை ஸ்டண்டுகளை அடித்து "வரலாறு" படைத்த இந்தக் கலைஞர் ஸ்வென் சாக்சால்பர், அடுத்த இரண்டு நாட்களும், பாரிசில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஒரு ஊசியைத் தேடப்போகிறார்.
 
இதற்கு முன்பாக அவர் அடித்த இது போன்ற "கலை ஸ்டண்டுகளில்" ஒரு பசு மாட்டுடன் ஒரே அறையில் ஒரு நாள் முழுதும் கழிப்பது, மரத்தில் தான் உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போன்றவை அடங்கும்.
 
செய்திகளில் இடம் பிடிக்கும் "கலை" தெரிந்தவர் போல.