லிங்க்டின் பொறிமுறையில் 'பாலியல் காழ்ப்புணர்ச்சியா'?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (02:40 IST)
சமூக வலைத்தளமான லிங்க்டின் தமது தேடுதல் பொறியின் வழிமுறை பெண்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை கொண்டுள்ளது எனக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
 
 
அமெரிக்க வெளியீடான 'தி சியாட்டில் டைம்ஸ்' நடத்திய ஒரு புலனாய்வில், உதாரணமாக "ஸ்டெஃபனி" எனும் பெண் பெயரைக் கொண்டு தேடினால் அது "ஸ்டீஃபன்" எனும் ஆண் பெயருக்கான தரவுகளைத் தருவது போலத் தெரிகிறது எனக் கண்டறிந்துள்ளது.
 
இதையடுத்து அந்த நிறுவனம் தேடுதலின்போது மாற்று பெயர்களை பரிந்துரைப்பதை தடுக்கும் நோக்கில் தனது தேடுதல் பொறியின் வழிமுறையை மாற்றியமைத்து மேம்படுத்தியுள்ளது.
 
இதற்கு முன்னர் நூறு ஆண்களின் பெயர்களைத் தேடினால் அதற்கு மாற்றாக ஒரு பெண்ணின் பெயரைக் கூட அது வெளிப்படுத்தவில்லை.
 
தமது தேடுதல் பொறியின் வழிமுறைகள் முன்னர் அடிக்கடி தேடப்படும் பெயர்களின் அடிப்படையில் அமைந்திருந்தன என்றும், பாலியல் அடிப்படையில் அல்ல என்றும் லிக்ங்டின் தெரிவித்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :