டிஸ்சார்ஜ் ஆன கனிகா கபூர்: கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட்!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூரின் 6 வது ரத்த சோதனை முடிவு நெகட்டிவ்வாக வந்ததையடுத்து அவர் வீடு திரும்பினார்.
மார்ச் 19 ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் மாதம் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய அவருக்கு நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான பார்டிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், மார்ச் இரண்டாம் வாரத்தில் னிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.
கனிகா கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் எம்.பி துஷ்யந்தும் கலந்து கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், இவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். ராம்நாத் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கை குலுக்கவில்லை என்றாலும், அவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூருக்கு 4 முறை ரத்த சோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்றை உறுதி செய்யும் விதத்தில் பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளிவந்தது.
இதனிடையே 5-வது மற்றும் 6-வது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை(நெகட்டிவ்) என்று ஆய்வு முடிவுகள் வந்ததையடுத்து கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.