செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (08:05 IST)

கொரோனாவில் இருந்து பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து!

கொரோனாவில் இருந்து பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூர் விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது 
 
அதுமட்டுமின்றி அவர் முக்கிய விவிஐபிகளுக்கு ஒரு விருந்து வைத்ததாகவும், அந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் ஆளுங்கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் கனிகா கபூர் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததாகவும் அடிக்கடி தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது.
 
இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 4 முறையும் அவருக்கு பாசிட்டிவ் வந்ததால் அவர் மருத்துவமனைகளில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு ஐந்தாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்ததால் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை குறிப்பிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ’நல்ல செய்தி’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்