செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (14:32 IST)

இனவெறியை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறாரா டொனால்ட் டிரம்ப்?

தனது ஆதரவாளர் ஒருவர் “வெள்ளை அதிகாரம்" என்று கோஷமிட்ட காணொளியை டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

ஃப்ளோரிடாவில் டிரம்புக்கு ஆதரவான நடைபெற்ற பேரணியில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் இவ்வாறு கோஷமிட்டுள்ளார். அதன் காணொளியைத்தான் டிரம்ப் மறுபகிர்வு செய்துள்ளார்.

இப்போது அமெரிக்காவில் நிலவும் இனப்பிரச்சினையை டிரம்ப் தனது தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், டிரம்ப் தரப்பு இதனை மறுக்கிறது.

அந்த காணொளியில் இடம்பெற்ற ‘வெள்ளை அதிகாரம்’ என்ற வார்த்தையை டிரம்ப் கேட்கவில்லை என்கிறார் அவரின் செய்தித் தொடர்பாளர்.

பின்னர் நீக்கப்பட்ட அந்த ட்வீட்டில் , அந்த பேரணியில் பங்குபெற்ற வட மேற்கு ஓர்லாண்டோ மக்களை சுட்டிக்காட்டி“அந்த கிராமங்களை சேர்ந்த மாபெரும் மக்களுக்கு நன்றி,” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர், “ஜனநாயக கட்சியினர் வீழ்வார்கள். ஊழல்வாதி ஜோபிடன் வீழ்வார்,” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பேரணிக்கு எதிராக கோஷமிட்ட டிரம்பின் எதிர்ப்பாளர்கள், ‘நாஜி'கள் என கோஷமிட்டார்கள்.

குடியரசு கட்சியை சேர்ந்த ஒரே கருப்பின செனட்டான டிம் ஸ்காட் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “மிகவும் அவமதிப்பான ட்வீட் இது,” என்று கூறி உள்ளார்

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜூட், “அந்த கோஷத்தை டிரம்ப் கேட்கவில்லை,” என கூறி உள்ளார்.

நானோ அல்லது டிரம்ப்போ அல்லது அவர் நிர்வாகமோ வெள்ளை மேலாதிக்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை என சுகாதார சேவைகள் செயலாளர் அலெஸ் அஜார் கூறி உள்ளார்.

இனவெறியை ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே டொனால்ட் டிரம்ப் மீது உள்ளது. பிரிட்டன் தீவிர வலதுசாரிகள் பகிர்ந்த கோபமூட்டக்கூடிய காணொளியை 2017ஆம் ஆண்டு டிரம்ப் பகிர்ந்தார்.இது அப்போதே சர்ச்சையானது.